• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பிங்க் நிற பேருந்துகள்- சென்னையில் இன்று முதல் இயக்கம்

ByA.Tamilselvan

Aug 6, 2022

பெண்கள் இலவசமாக பயணம் செய்ய பிங்க் நிற பேருந்துகள் சென்னையில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்கவும், இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் காணவும் பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பிங்க் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து பிற மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கத்தையும் அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.