• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா – ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.

புதிய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் மின்சாரத்தை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சூரிய சக்தி மின் உற்பத்திக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க உள்ளது.

திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டன என அவர் கூறினார்.