• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மேலும் 3 வாரம் அவகாசம் வேண்டும்- ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ByA.Tamilselvan

Aug 2, 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வாரம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், சசிகலா உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் இன்னும் விசாரணை முடிவுக்கு வரவில்லை. இதனால் ஆணையத்தின் விசாரணை காலத்தை ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற் கொண்டனர். இதன் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் தாக்கல் செய்ய எய்ம்ஸ் மருத்துவ குழு ஆணையத்திடம் தகவல் தெரிவித்து இருந்தது. இதையடுத்து கூடுதல் அவகாசம் கேட்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து முடிக்க மேலும் 3 வார காலம் அவகாசம் வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியாவதில் தாமதமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.