கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் யானை தத்தளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை ஒன்று சிக்கிக் கொண்டு தத்தளித்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நேற்று பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்றுவெள்ளத்தில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் அங்கும்,இங்கும் சுற்றித்திரிந்து வருகிறது. அந்த யானையை மீட்க கேரள வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்க்கொண்டுவருகின்றனர்.