• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அன்புமணி ராமதாஸ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்

ByA.Tamilselvan

Jul 29, 2022

போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி நாளை அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்.
பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (சனிக்கிழமை) காலை போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.