• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நயன்-விக்கி ரசிகர்களுக்கு நெட்பிளிக்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்…

Byகாயத்ரி

Jul 21, 2022

நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், நண்பர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் செல் போன், கேமரா போன்றவற்றை உபயோகிக்க கூடாது, என்கிற வேண்டுகோளையும் நயன் – விக்கி தரப்பில் முன் வைத்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய திருமண நிகழ்வுகளை படம் பிடிக்கும் உரிமையை நெட்பிக்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 25 கோடிக்கு வழங்கியது தான். ஆனால் நெட்டபிளிக்ஸ் ஒப்பந்தத்தை மீறும் விதமாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, சில திருமண புகைப்படங்களை வெளியிட்டதால் இந்த ஒப்பந்தத்தை நெட்டபிலிக்ஸ் நிறுவனம் ரத்து செய்ய உள்ளதாக ஒரு தகவலும் வெளியானது. அண்மையில் வந்த செய்தியில் கூட, நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நெட்பிளிக்ஸ் செலவு செய்த தொகை, வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்த தொகையை நயன்தாரா தரப்பில் இருந்து வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இதை தெளிவுபடுத்தும் விதமாக நெட்பிளிக்ஸ் தரமான செயலை செய்துள்ளது.

இந்நிலையில் இன்று, நெட்பிளிக்ஸ் இணையதளம், நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ப்ரீ வெடிங் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடற்கரையில் செய்த ரொமான்ஸ் படத்தையே விஞ்சிவிட்டது. இவர்களது ரொமான்ஸ் பற்றி சொல்லவா வேணும் சமூகவலைத்தளத்தயே அதிர வைக்கும் ரொமான்டிக் கபுல்ஸ் நயன்-விக்கி. ப்ரீ வெடிங் போட்டோஷூட்டில் அன்பை அள்ளித் தெளிச்சிருக்காங்க…. இதை பார்த்த ரசிகர்கள் ஆ…ஊ.. என்று ஷாக் ஆகி வருகின்றனர்.