• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆழ்வார்குறிச்சியின் அற்புத மனிதர் அனந்தராமகிருஷ்ணன்…

ByAlaguraja Palanichamy

Jul 20, 2022

சிவசைலம் கோயிலில் இருந்து கிழக்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி.பரமகல்யாணியின் பரம பக்தர்கள் இவருடைய குடும்பத்தினர். இவருடைய தந்தை திரு. சிவசைலம் அவர்கள்.1905 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த அனந்த ராமகிருஷ்ணன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னையில் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார்.

ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான சிம்ப்சன்ஸ் குழுமத்தில் 1935 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 1938ல் அந்நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநர் ஆகப் பொறுப்பேற்றார். 1950 களில் நிறுவனம் முற்றிலும் இவர் வசமானது. 1964 ஆம் ஆண்டு வரையிலும் அதன் சேர்மனாக இருந்து மறைந்தார். எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத சிற்றூரான ஆழ்வார்குறிச்சிக்கு இவர் செய்த நன்மைகள் பல.உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, மருத்துவ மனை, கல்யாண மண்டபம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்று மாவட்டத் தலைநகராக விளங்கும் தென்காசியில் கூட கல்லூரி இல்லாமல் இருந்த காலம் அது! இந்தப் பகுதி மாணவர்கள் திருநெல்வேலி அல்லது ராஜபாளையம் போய் உயர்கல்வி பெறுவதற்காக அலைந்த நேரத்தில் இவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி எத்தனையெத்தனை துறைகளில் பலரையும் வார்த்தெடுத்தது! தொழில் முனைவோர் என்று நாம் இன்று குறிப்பிடும் முதலாளிகளால் அவரவர் ஊருக்குக் கிடைக்கும் நன்மை இதுதான்!

Amalgamation Ltd என்ற நிறுவனத்தின் மூலம் நாற்பது நிறுவனங்களை உருவாக்கி, இந்தப் பகுதியில் உள்ள பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கியதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்! இன்று பணிக்குத் தகுந்த நபர்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகள் மாறிவிட்டன. ஆனால் அப்போதெல்லாம் யாராவது பரிந்துரைத்தால் போதும், வேலை கிடைக்கும்! இந்தக் குழுமத்தின் ஓர் அங்கமான TAFE ( Tractors and Farm Equipments Ltd) நிறுவனம் உலகிலேயே மிகச் சிறந்த டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாக இன்று விளங்குவது நமக்கு பெருமையல்லவா! அதுவும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி ( திருமதி. மல்லிகா ஸ்ரீ நிவாஸன்) இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்!

( மல்லிகா ஸ்ரீ நிவாஸன், அனந்த ராமகிருஷ்ணன் அவர்களுடைய மகன் சிவசைலம் அவர்களுடைய மகள். இவருடைய கணவர் வேணு ஸ்ரீ நிவாஸன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சேர்மன் ஆவார்.)

ஆட்டோமொபைல் துறைக்குத் தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பில் இவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு, அனந்த ராமகிருஷ்ணன் அவர்கள் ‘ Henry Ford of South India’ அழைக்கப்பட்டார் என்றால் அது இந்த மண்ணுக்கு பெருமையில்லையா! எல்லா ரயில் நிலையங்களிலும் ( முன்பு) ‘ ஹிக்கின்ஸ்பாதம்’ என்கிற புத்தகக்கடையைப் பார்த்திருப்போம்! அது சிம்ப்சன் குழுமத்தின் ஓர் அங்கம்தான்! இன்னும், India Pistons, IP RINGS LTD, TAFE, Addison Paints, Stanes Tea, Spencer’s இப்படி நாற்பது நிறுவனங்கள்! Amalgamation Group அம்பானி, அதானிகளின் குறுகிய கால அசுர வளர்ச்சியுடன் இவர்கள் வளர்ச்சியை ஒப்பிட முடியாது! அறம் சார்ந்த வளர்ச்சி! ஆனால் இப்படி எதுவும் இங்கே இல்லை என்பது போலத்தான் ஊரைக் கடந்து செல்லும் மற்றவர்களுக்கு இந்த ஊர் தெரியும்! சிவசைலத்திலுள்ள ஆலயத்துக்கும் இவர்களது குடும்பம் எவ்வளவோ செய்திருக்கிறது.

சிவசைலம் என்ற தலத்துடன் ஆழ்வார்குறிச்சியையும் இணைத்தே நாம் விளங்கிக் கொள்ள முடியும். இப்போது எல்லா தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் பேருந்துகளை இயக்குகின்றன. ஆனால் அறுபதுகளில் அது அபூர்வம்! சாம்பல் வண்ண பெட்ஃபோர்டு பஸ் ஒன்று எங்கள் ஊருக்கு வந்து மாணவர்களை ஏற்றிச் செல்லும். சிலர் சைக்கிளிலும் செல்வதுண்டு. இப்படி வேலைவாய்ப்புகளை அதிகரித்து அனைவருக்கும் வேலை வழங்கிய இக்குழுமத்திற்கு சல்யூட் தான் போட வேண்டும்…