• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

Byகாயத்ரி

Jul 19, 2022

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கோவை, திருப்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறிப்பிடப்பட்டுள்ளது.