• Fri. Apr 26th, 2024

தமிழகத்தில் உயரும் மின் கட்டணம்

ByA.Tamilselvan

Jul 19, 2022

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி கடன் உள்ளதால் வட்டி கட்ட முடியாத சூழல் ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மேலும் கடன் கொடுக்க மறுத்து வருகிறது. வருடம் தோறும் மின் கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் பெறக்கூடிய மானியங்கள் கிடைக்காது என்றும் மத்திய அரசு கூறி வந்தது. இதன் காரணமாக தமிழக மின் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது எனவே மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் இணைப்பு வைத்திருப்பவர்களில் 1 கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு ஏதும் இல்லை. அனைத்து வீடுகளிலும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் என்பதிலும் மாற்றம் இல்லை. குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி படி நிலைக்கட்டணம் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். 2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.36 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.72.50-ம், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர் செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.147.50-ம், 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோருக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம் மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மின் நுகர்வு 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும்போது அதற்கான மின் கட்டண தொகையானது 58.10 சதவீதம் அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இதே போல் பல்வேறு விவரங்களையும் விரிவாக கூறினார். இதில் 500 யூனிட் பயன்படுத்தும் நடுத்தர பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் இப்போது டி.வி., பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி இல்லாத வீடுகளே இல்லை. எல்லா வீடுகளிலும் மின் உபயோகம் பரவலாக உள்ளது. அப்படி பார்க்கும்போது 2 மாதத்துக்கு 500 யூனிட் தாராளமாக வந்து விடும். அந்த வகையில் 500 யூனிட் வந்தாலே ரூ.1,130-ல் இருந்து ரூ.1,725 பணம் கட்ட வேண்டும். அதாவது 52 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *