• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்..!

தமிழ் ரசிகர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சிம்பு.

தற்போது மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படம் வருகிற நம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது.

கடந்த லாக்- டவுன் காலத்தில் தனது உடல் எடையை பதியாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர். இப்போது ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸை கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்பம் பாடல் ஒன்றை பாடி உள்ளதாகவும், அப்பாடல் விரைவில் வெளியிட உள்ளதை தான் அவர் இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது