• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தங்க செயின் மற்றும் மோதிரத்திற்காக விடுதி மேலாளர் கொலை

Byகுமார்

Jul 8, 2022

மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு: தங்க செயின் மற்றும் மோதிரத்திற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை தெரியவந்துள்ளது – வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை.

விடுதி மேலாளர்


மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,
சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 30) என்பதும்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்

இவர் மதுரையில் உள்ள துணிக்கடைகளில் ஆர்டர் பெற்று வடமாநிலத்தில் இருந்து மொத்த துணி வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மாத வாடகைக்கு அந்த லாட்ஜில் தங்கி இருந்துள்ளார் எனவும்,
இந்தநிலையில் இன்று அதிகாலையில் ரூமை காலி செய்து விட்டு சென்ற போது லாட்ஜு மேலாளர் உறங்கி இருந்த போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை அணைத்து விட்டு மேலாளரிடம் இருந்து செயின் மற்றும் மோதிரத்தை திருட முயற்சி செய்த போது தடுத்த மேலாளரை கொலை செய்து நகையை பறித்து தப்பி உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து திடீர்நகர் போலீசார் மேற்கொண்டு விசாரணையில் கோபால கிருஷ்ணனை பிடித்த மேலும் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.