• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக வாய்ப்பு…

ByA.Tamilselvan

Jul 8, 2022

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளி சேர்ந்த ரிஷி என்பவருக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காலத்தில் சில நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்தாலும், எல்லா விவகாரங்களிலும் போரிஸ் ஜான்சன் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவரது ஆட்சி முறை விமர்சனத்துக்கு உள்ளானது.
அதிகாரிகள், அமைச்சர்கள் இருவர் அடுத்தடுத்து பதவி விலகியதால் நெருக்கடி ஏற்பட்டது.இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இதில் ரிஷி சுனக் என்ற இந்திய வம்சாவளி நபரின் பெயர் முதல்வரிசையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக்குக்கு தான் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.