சிறைத்துறையில் பல்வேறு குளறுபடிகள் இன்றும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. காவல் அதிகாரிகள் தன் சுயநலத்திற்க்காக கைதிகளை பயன்படுத்தி லஞ்ச வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதை கண்டிக்க சில நல்ல அதிகாரிகள் இருந்தும் அவர்களையும் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர். இதையெல்லாம் யார் தட்டி கேட்பா..?? என்று குமுறுகின்றனர் மற்ற காவல் அதிகாரிகள். இதைபோல் திருச்சியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்ட சிறைக்கூடத்தில் தற்போது சிறையில் உள்ள கைதிகள் சிலருக்கு கஞ்சா, குட்கா பீடி, சிகரெட் போன்ற சகல வசதிகள் செய்து கொடுப்பதாக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளின் உறவினர்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த குற்றத்திற்கு பின்னால் முழு காரணமாக இருப்பவர் திருச்சி சிறைத்துறை டிஐஜி ஆக பணிபுரியும் ஜெயபாரதி. இவரது கணவர் சென்னையில் டாஸ்மாக் மேலாளராக பணிபுரிகிறார். ஜெயபாரதி வேலூர் சிறைத்துறை டிஐஜியாக பணிபுரிந்தபோது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றி இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நவடிக்கையும் எடுத்துள்ளனர். பின் இவர் திருச்சி சிறைத்துறைக்கு டிஐஜியாக மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நெருக்கமாக இருக்கும் சிலரை வைத்து லஞ்ச வேட்டையிலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மாமுல் வசூல் செய்து மாதம் தவறாமல் அவருக்கு சிலர் மூலம் போகின்றது. அவரின் கூட்டாளியாக அவர் அலுவலகத்தில் பணிபுரியும், முகாம் அலுவலர் சிவகுமார், நாகராஜன் ஆகியோர் மற்றும் அவருக்கு நெருக்கமான தலைமை காவலராக மத்திய சிறையில் பணிபுரிந்து வரும் பாண்டியன் மூலமாக, கிளை சிறையில் கைதிகளை பார்க்க வருபவர்களிடம் வசூல் செய்யும் பணத்தை திருச்சி சரகத்தில் பணி புரியும் கணபதி மற்றும் ஜெயபாரதி பெற்று டிஐஜி முகாம் அலுவலர் சொல்லும் இடத்திற்கு லஞ்ச பணத்தை கொண்டு செல்கின்றனர்.
டிஐஜி செய்யும் அனைத்து தவறான காரியங்களுக்கும் இவர்கள் உடந்தையாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.அங்கு பணிபுரியும் மற்ற காவலர்களான இளங்கோ, மகேஷ் சுயம்புலிங்கம், முருகன் இவர்கள் செய்யும் அட்டூழியத்தை தட்டி கேட்டால் உளவுத்துறையில் பணிபுரியும் எங்களுடைய நண்பர் உதவி ஆய்வாளர் தமிழ்வேந்தன் மூலமாக உங்கள் அனைவரின் மீது ஏதாவது ஒரு புகாரை கூறி நடவடிக்கை எடுக்கும்படி கூறி விடுவேன். எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று கணபதி மற்றும் ஜெயபாரதி மிரட்டி வருவதாக கூறுகின்றனர். தஞ்சாவூர் கிளை சிறையில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் மணிகண்டனும் இவர்களின் கூட்டாளிதான்.
இது குறித்து, மற்ற காவல் அதிகாரிகள் நேர்மையான சிறை கூடத்தின் சூப்பிரண்ட் செந்தில் குமாரிடம் எடுத்து கூறியுள்ளார்கள். அவர் உடனே சிறைச்சாலைக்கு உள்ளே சென்று அனைத்து இடங்களிலும் சோதனை செய்து பீடி, சிகரெட்,புகையிலை போன்ற அனைத்தையும் கண்டு பிடித்து இதை போல இனி தவறுகள் ஏதும் நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவறு செய்த காவலர்களை எச்சரித்துள்ளார். அடுத்த ஐந்து நிமிடத்தில் டிஐஜி அவர்களிடமிருந்து சூப்பிரண்ட் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் கைதிகள் புகையிலை குட்கா உபயோகிப்பதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் இதையெல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் என்று நேர்மையான அதிகாரியான செந்தில்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. நான் இங்கு இருக்கும் வரை சிறைக்கூடத்தில் எந்த தவறும் நடக்க விடமாட்டேன் நேர்மையாகவே பணிபுரிவேன் என்று டிஐஜி இடம் கரராக கூறியுள்ளார். இதை தாங்கிக்கொள்ள முடியாத டிஐஜி அவருக்கு வேண்டிய சிலரை வைத்து கைதி வெள்ளைக் காளி (தற்போது பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டார்) அவருடைய அக்கா ஜோதியிடம் பணம் பெற்று உடனே அங்கிருக்கும் கைதிகளுக்குள்ளே சண்டை இழுக்க தூண்டும் வகையில் கணபதி மற்றும் ஜெயபாரதி சில வேலைகளை செய்துள்ளனர். சிறையில் கலவரம் வெடித்தது.
இதை தட்டிக் கேட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய நேர்மையான அதிகாரி செந்தில்குமாரை உன்னை என்ன செய்கிறேன் பார் உன்னை இந்த திருச்சி மாவட்டத்திலிருந்து விரட்டுகிறேன் என்று மிரட்டி உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் பல பொய் புகாரை டிஐஜி அவருக்கு வேண்டியவரை வைத்து உருவாக்கி அவரே விசாரணை என்ற பெயரில் நேர்மையாக பணிபுரியும் காவலர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார் என்று சக காவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதனால் இதை போல நேர்மையான அதிகாரிகளை பாதுகாத்து, தவறான அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கும் படி சக காவலர்கள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் சிறைத்துறை டிஜிபிக்கு வேண்டுகள் விடுத்துள்ளனர்.
டிஐஜி மட்டுமின்றி இன்னும் சில மேலதிகாரிகளும் இதுபோல் தவறான வழியில் உலா வருகின்றனர். இந்த விஷயத்தை முதல்வர் ஸ்டாலின் கண்டுக்கொள்வாரா…?? இவர்கள் மீது சட்டம் பாயுமா..?? எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் நேர்மையான காவலர்கள்.