• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய கல்வி முறை இந்தியாவுக்கு தேவையில்லை

ByA.Tamilselvan

Jul 8, 2022

பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய கல்வி முறை இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது மோடி பேச்சு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாரணாசில் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர்
பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது என்று பிரதமர் கூறினார். நமது கல்வி முறை இளைஞர்களை பட்டதாரிகளாக மட்டும் உருவாக்காமல், நாடு முன்னோக்கிச் செல்வதற்கு உதவுபவர்களாக இருக்கும் வகையில் உதவ வேண்டும் என்றும், நமது ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த உறுதிப்பாட்டிற்கு தலைமையேற்க வேண்டும் என பிரதமர் கூறினார். குழந்தைகளை அவர்களது திறமை மற்றும் விருப்பத்திற்கேற்ற திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், புதிய கல்விக்கொள்கை முழு கவனமும் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.