திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று வில் அம்பு எய்தல்நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியையொட்டிமுருகப்பெருமான் தங்கக்குதிரையில் எழுந்தருளி நான்கு திசையில் ஏட்டு திக்குமாக வில், அம்பு எய்தார்.

நவராத்திரி விழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்கள் கொலு அலங்காரமும், ஒருநாள் “வில் அம்பு எய்தல்” ஆகிய 10 நாட்கள்நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.அதே போல இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் 19-ந் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவிழாவையொட்டி கோவிலுக்குள் கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரியின் சிறப்பு அம்சமாக திருவிழாக் காலங்களில் சுவாமி எழுந்தருளிய கூடிய வாகனங்கள் யாவும்கொலு பொம்மைகளாக வீற்றி இருந்தது
வில் அம்பு எய்தல்
திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று (20-ந் தேதி) அசுரர் மகி ஷாசுரமர்த்தனியை கோவர்த்தனாம்பிகையின் அவதாரமாக முருகப்பெருமான் வதம் செய்யக்கூடிய “வில் அம்பு எய்தல்” நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி நேற்று மாலை 5 மணியளவில்திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் வேலோடும்,வெள்ளியிலான வில் மற்றும் அம்பும்ஏந்தியபடி தங்க குதிரைவாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதிதெரு,16 கால் மண்டபம், மூலக்கரை வழியாகபசுமலையில் உள்ள “வில்அம்பு எய்தல்”மண்டபத்திற்கு வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர்அங்கு தங்க குதிரையில் இருந்தபடியே வில் அம்பு எய்தலமுறை மண்டபத்தை 3 முறை வலம் வந்துநான்கு திசையிலும் எட்டுத்திக்குமாகமுருகப்பெருமான் தன் திருக்கரத்தில் இருந்து வில், அம்பு எய்து அசுரைசம்ஹாரம் செய்தார்.

அப்போது அங்கு திரளாக கூடி இருந்தபக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா “,வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பய பக்தியுடன் முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.இந்த நிலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.



