• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீலகிரியில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை..

Byகாயத்ரி

Jul 6, 2022

மேற்குதிசை காற்றின் மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் நீலகிரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு அகலார் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத கற்பூரம் மரம் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. ஊட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தா தலைமையில் சம்பவ பகுதிக்கு சென்ற தீயணைப்பு துறை ஊழியர் மரத்தை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். இதன்படி உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.