• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை

ByA.Tamilselvan

Jul 6, 2022

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், தேனி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.