• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் உத்தவ் தாக்கரே

ByA.Tamilselvan

Jun 22, 2022

கடும் அரசியல் நெருக்கடி காரணமாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.
மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் எம்எல்ஏ-க்களை, பாஜக தன்பக்கம் இழுத்து விட்டதாக கூறப்படும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 3-ஆவது முறை யாக ஆட்சிக்கலைப்பு முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே 40 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாம் தலைநகர் கவுகாதியில் முகாமிட்டுள்ளார். இதனால் உத்தவ்தாக்கரே அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. இந்தசூழலில் இன்று மதியம் நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தனது ராஜினாமாவை உத்தவ் தக்கரே அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.