• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பள்ளிகள் திறப்பு எப்போது..?

1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு அளித்துள்ள தளர்வு படி 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தந்த பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் என்றும், நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.