• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நகை வாங்குவது போல் நடித்து 10 பவுன் திருட்டு…

Byகாயத்ரி

Jun 6, 2022

மதுரையில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 10 பவுன் சங்கிலி திருட்டு.

மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று அங்குள்ள கடை ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து கடையின் உரிமையாளர் அசந்த நேரத்தில் 10 பவுன் தங்கச்சங்கிலியை திருடி தப்பி ஓடியுள்ளார்.

திடீரென அந்த பெண் நகை வாங்காமல் சென்றதால் குழப்பம் அடைந்த கடையின் உரிமையாளர் நகைகளை சரிபார்த்த போது 10 பவுன் சங்கிலி திருடு போனது தெரியவந்தது. உடனே இந்த திருட்டு சம்பவம் குறித்து கடை உரிமையாளர் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து சி.சி.டிவி.கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நகை திருடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த பெண் நகையை திருடி தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.