• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

“பேசும்படம்” ஸ்டைலில் “காந்தி டாக்ஸ்”!

நடிகர் விஜய் சேதுபதி , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்தியில் தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது. கிஷோர் பாண்டுரங் பலேகர் என்ற மராத்தி இயக்குநரின் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

அரவிந்த்சாமி, அதிதீ ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம், 1987ம் ஆண்டு கமல், அமலா நடித்த பேசும்படத்திற்கு பிறகு வசனமே இல்லாத ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.