• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

டிரை ஃப்ரூட் சிக்கி :

Byவிஷா

May 5, 2022

தேவையானவை:
பாதாம், முந்திரி – தலா கால் கப் (பொடியாக நறுக்கவும்)
வறுத்த வேர்க்கடலை, வறுத்த வெள்ளை எள் – தலா கால் கப்
பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதைச் சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி, கனமாக தேய்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கிக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.