• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கவிதையில் ரமலான் வாழ்த்து சொன்ன கவிஞர் வைரமுத்து

ByA.Tamilselvan

May 3, 2022

இஸ்லாமிய மக்களுக்கு கவிதை வடிவில் தனது ராமலான் வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர்.ஜனாதிபதி,தமிழக முதல்வர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து, ரம்ஜான் பண்டிகையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கவிதையில் சமூகநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கவிதை…
மெய்வருத்தம் ஏற்று
சக மனிதனின்
துயர் உணர்கிறது
ஈகையை
வாழ்க்கையின் பாகமாக்குகிறது
சமூக வாகனத்திற்கு
சகோதரத்துவமே
சக்கரம் என்கிறது
உலக நாடுகளின்
கொடிகளிலெல்லாம்
சமாதானப் பூக்களையே
யாசிக்கிறது
ரமலானை
வகுத்தவர்களையும்
வாழ்கிறவர்களையும்
வாழ்த்துகிறேன்
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.