• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

ByM.maniraj

Apr 29, 2022

கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்குகிறது.இத்திருவிழா 8ம் தேதி பொங்கல்விழாவுடன் நிறைவுபெறுகிறது.
கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திருமாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து மே மாதம் 1 ம் தேதி காலை 6 மணிக்கு அரண்மனை பூஜை மற்றும் இரவு 11 மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடக்கிறது. 2 ம் தேதி மற்றும் 3 ம் தேதி, 4 ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடக்கிறது. 5 ம் தேதி மாலை 4 மணிக்கு அன்னமூத்திரி பூஜை மற்றும் ஆத்தியப்பசுவாமி வேட்டை ஆடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6. மணிக்கு ஆத்தியப்பசுவாமி க்கு படி பூஜை நடக்கிறது. 6 ம் தேதி மஞ்சள் நீராட்டத்துடன் கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 8 ம் தேதி எட்டாம் பொங்கல் விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை திருமாளிகை ஆதீன குரு திருமால்சுவாமிஜி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் அனந்தகிருஷ்ணன்ஜி, செல்லச்சாமிஜி, சங்கரேஸ்வரன்ஜி, திம்மப்பசாமிஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.