திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் செந்தில் சுபாஷ் (வயது 38). இவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் தங்கி, சின்னத்திரை நாடகம் மற்றும் விளம்பர படங்களுக்கு கதை எழுதி கொடுக்கும் கதாசிரியராக பனி செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நண்பரை பார்க்க வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற செந்தில் சுபாஷ் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த நிமிலன் என்பவர் விறகு வெட்டுவதற்காக சென்றார். அப்போது காட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மதுக்கரை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விசாரணையில், பிணமாக கிடந்த நபர் மாயமான செந்தில் சுபாஷ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.