• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மனைவியின் இறுதி ஊர்வலம்.. உடைந்து போன ஓபிஎஸ்!

OPS

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் உடல் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை 6:45 மணி அளவில் சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 63. ஓ.பி.எஸ். மனைவியின் திடீர் மறைவு அதிமுக தொண்டர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.

OPS

நேற்று தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விஜயலட்சுமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.கே.சசிகலா, வைகோ, கி.வீரமணி, சீமான், திருமாவளவன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

அதன் பின்னர் சென்னையில் இருந்து விஜயலட்சுமியின் உடலானது சாலை மார்க்கமாக தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தென்கரை அக்ரஹாரம் பகுதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயலட்சுமியின் உடலுக்கு திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

OPS

இதனையடுத்து ஓபிஎஸ் மனைவியின் உடலானது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் இருந்து வடகரை பகுதியில் உள்ள நகராட்சி தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள், ஊர் மக்கள் என ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.