• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேஜிஎப் -இதுக்கெல்லாம் நிகரானது இல்லை – சி.வி.குமார்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார், ‘ஒரு முள்ளும் மலரும், கல்யாணப்பரிசு, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி, சதுரங்க வேட்டை, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, மெட்ராஸ், க க போ, விக்ரம் வேதா, தீரன்அதிகாரம்ஒன்று, இறுதிசுற்று, ராட்சசன், பரியேறும் பெருமாள், கைதி, ஜெய்பீம், டாணாக்காரன் ஆகிய படங்களை எல்லாம் விட இந்த மாஸ் கோலார் தங்கவயல் தான் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்னா, தமிழ் சினிமாவே நல்லா இருக்குப்பா, தயவுசெய்து விட்டுருங்க எனப் கூறியுள்ளார்.

மேலும் கேஜிஎப் திரைப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் தான். ஆனால் தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் இயக்கியுள்ள படங்களுக்கு இது நிகரானது அல்ல என்பது தான் எனது கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.