• Tue. Apr 30th, 2024

கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

By

Aug 31, 2021 , ,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இத்திட்டத்திற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனறார். அயல்நாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் எனவும் வெளி மாநிலங்களில் தமிழ் பயில்வோருக்கு உதவித் தொகை தரப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

இவற்றுடன், பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆண்டுதோறும் அதில் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை தரப்படும். மேலும் ,தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத்தொகை உள்ளிட்டவற்றையும் வழங்கப்படும் எனஅமைச்சர் அறிவித்துள்ளார். அந்தவகையில் சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *