• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மேனியை பொன்னிறமாக்க நலங்குமாவு:

Byவிஷா

Apr 5, 2022

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 50 கிராம், பாசிப் பருப்பு – 50 கிராம், வசம்பு – 50 கிராம், ரோஜா மொக்கு – 50 கிராம், சீயக்காய் – 50 கிராம், அரப்புத் தூள் – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம், விலாமிச்சை வேர் – 50 கிராம், நன்னாரி வேர் – 50 கிராம், கோரைக் கிழங்கு – 50 கிராம், பூலாங்கிழங்கு – 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம், மஞ்சள் – 50 கிராம், ஆவாரம்பூ – 50 கிராம், வெந்தயம் – 50 கிராம், பூவந்திக்கொட்டை – 50 கிராம்
செய்முறை
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும். பின்னர் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.

குறிப்பு
நலங்கு மாவு தயார் செய்ய தேவையான மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்காமல் மற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ளலாம்.