• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

குதிரைகளுக்கும் நானும்! – கார்த்தி

தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் என்ற சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ள இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இந்தக் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரையுடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ள கார்த்தி குதிரையுடன் தனக்கு இருக்கும் காதல் மிகவும் அலாதியானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காஷ்மோரா படத்தில் தான் குதிரையேற்றத்தை கற்றதாகவும் தற்போது அது பொன்னியின் செல்வன் படத்தில் காதலுடன் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சந்தோஷத்தை தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கார்த்தி, குதிரை தன்னுடன் சேர்ந்து பயணித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.