• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சமந்தாவிற்கு நயன் கொடுத்த பரிசு!

நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்கள், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவைடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் படக்குழுவினருடன் கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா சமந்தாவிற்கு படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, கம்மலை பரிசாக கொடுத்துள்ளார். அவர் கொடுத்த கம்மலின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது நன்றியை சமந்தா தெரிவித்துள்ளார்.