• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஏப்ரல் 2-ல் வெளியாகும் ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்!

‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும், தெலுங்கில் ‘விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர்.

‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் டீசரையும் ட்ரெய்லரைம் காண காத்திருந்த நிலையில், ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.