• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு…

Byகாயத்ரி

Mar 30, 2022

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து 106 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 96.76 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.