• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தொகுதிக்கே செல்லாமல் டிமிக்கி கொடுத்த எம்.எல்.ஏ க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சவுக்கடி….

By

Aug 29, 2021 , ,

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேளாண்மை மானிய கோரிக்கை விவாதத்தில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர் செல்வம் விவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  ”கிராமங்களில் ஒருநாள்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் கிராமங்களுக்கே செல்லாமல் இனிமேல் தங்களது ஐந்தாண்டு பதவி கால பணியை பூர்த்தி செய்ய முடியாது எனவும், ஒவ்வொரு மாதமும் கிராம மக்களின் வாழ்க்கைத்தரம், பிரச்சனைகள்,  அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என எல்லாவற்றையும் நேரடியாக அறிந்து அவற்றை மனுக்களாக பெற்று அவற்றிற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  ”கிராமங்களில் ஒருநாள்” என்ற ஒரு புதிய திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் விவசாய்களின் குறைகளை தீர்க்கப்படுவதுடன், கிராமத்து மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தலைமையிடத்திலிருந்து நேரடி தொடர்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கே செல்லாமல் டிமிக்கி கொடுக்கும் எம்.எல்.ஏ களுக்கு ஒரு சவுக்கடி போலவும், ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இத்திட்டத்தை முதல்வர் இன்று சட்டப்போரவையில் அறிவித்துள்ளார்.