• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கதறல் குரல் கேட்டு… நடுரோட்டில் காரை விட்டு இறங்கிய தேனி ஆட்சியர்!

தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்விற்காக அனுமந்தன்பட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கி, கால் எலும்புகள் முறிவடைந்ததால் சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனடியாக ஆட்சியர், காயமடைந்த நபரை பத்திரமாக மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அடிபட்ட நபருடனே மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை வரை சென்று, மருத்துவர்களிடம் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். சிகிச்சைக்குப் பிறகு காயமடைந்த நபரையும் ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.