• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அஜித், விஜய்யிடம் கோரிக்கை வைக்கும் பிரபலம்!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு டாப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் குறித்த எந்த தகவல் வெளிவந்தாலும் அதனை பெருமளவில் வைரலாக்குவர். மேலும் இது ஒருபுறமிருக்க அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

தற்போது விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் "RIP Joseph Vijay", "Aids Patient Ajith" என்ற ஹேஷ்டேக்கை அவர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் அதனை நிறுத்தும்படி பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், அன்பின் பெயரால் வாந்தி எடுக்கும் இந்த சமூகப் போரை முடிவுக்கு கொண்டு வர எழுத்துப்பூர்வமான அறிக்கையை வெளியிடுமாறு விஜய் மற்றும் அஜித் இருவரையும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயர், படங்களை தவறாகப் பயன்படுத்தி கலாச்சாரத்தை கெடுக்கின்றனர். அதை நிறுத்த வேண்டும், இல்லையென்றால் அடுத்த தலைமுறை சமூக விரோதிகளாக மாறுவதை நாம் அனுமதிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.