• Wed. Dec 11th, 2024

இரண்டே நாளில் ஆர்.ஆர்.ஆர் எட்டிய மைல்கல் சாதனை!

ஆர் ஆர் ஆர் படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ ( ரத்தம் ரணம் ரெளத்திரம்) நேற்று வெளியானது. இந்நிலையில் சுமார் 450 கோடி ரூபாயில் உருவான இந்த படம் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் முதல் நாள் வசூலாக 223 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் படைக்காத சாதனையாகும். இதையடுத்து இப்போது இரண்டு நாள் வசூலாக உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.