பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி 450 கோடி பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய தோல்வியை பெற்றது என்றும் தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபாய் நஷ்டத்தை அளித்ததாகவும் கூறப்பட்டது
இந்நிலையில் இந்த படம் அமேசானில் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் ரிலீசான 20 நாட்களில் ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது