• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு தமிழகத்தில் அனுமதியளிக்கக்கூடாது – நெல்லை முபாரக்

Byகுமார்

Mar 20, 2022

மதுரையில், எஸ்டிபிஐ கட்சியின் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் கூறுங்கயில், “தமிழகத்தில் நேற்று நடந்த பட்ஜெட் தாக்கல் இனிப்பும் கசப்பும் கலந்த ஒன்றாக உள்ளது. சிறுபான்மை மக்களுக்கான எந்த ஒரு முன்னேற்றமும் பட்ஜெட் இல்லை. சென்னை ஈ.சி.ஆர் ஆறு வழிச்சாலை சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ளது. அதை தடை செய்ய வேண்டும். தர்காக்கள் மசூதிகள் என விரிவு படுத்தி நிதி ஒதுக்க வேண்டும். சேலம் எட்டு வழி சாலையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்கள் அதற்கு தடைசெய்ய கோரி போராடுவோம்.

கர்நாடகாவில் வழங்கியது ஹிஜாப் தீர்ப்பு அரசியல் அமைப்புக்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் எதிராக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம்கள் போராட கூடாது இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மதச் சார்பற்ற அமைப்புகளும் போராடி எங்களுக்கு நீதி வாங்கி பெற வேண்டும். காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது, பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் அந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்கள் என்றும் நீதியின் வழியிலேயே நீதிமன்றத்தை நாடி செல்பவர்கள் அவர்கள் ஒருபோதும் தவறான வழிகளில் செல்லப் மாட்டார்கள், உணர்ச்சிவசப்பட்டு பொது மேடையில் பேசுவது தவறு அதற்கு ஒருபோதும் நாங்கள் துணைபோக மாட்டோம் அது கண்டிக்கத்தக்கது என்றார்.