• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னை ஐஐடி வளாகத்தில் 4 மான்கள் உயிரிழப்பு…

Byகாயத்ரி

Mar 19, 2022

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு 4 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட பல வன உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஐடி வளாகத்திற்குள் மான் ஒன்று இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மானின் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டதில் மானுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து நேற்றைக்குள் மேலும் 3 மான்கள் இறந்துள்ளன. இந்த மான்களின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மான்கள் மற்றும் விலங்குகளிடையே ஆந்த்ராக்ஸ் நோய் பரவியுள்ளதா என்ற பீதி எழுந்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.