• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிறவி பலன் வேறொன்றும் இல்லை -லோகேஷ் கனகராஜ்!

இதைவிட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை என்றும் நன்றி ஆண்டவரே என்று கமல்ஹாசனின் வாழ்த்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட் செய்துள்ளார்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ்க்கு தெரிவித்துள்ள வாழ்த்தில், ‘ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷ்-க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.’ என்று கூறியுள்ளார்!

கமல்ஹாசனின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள லோகேஷ் கனகராஜ், “இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே!” என்று குறிப்பிட்டுள்ளார்!