• Tue. Sep 26th, 2023

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் அழியா தடம்…

Byகாயத்ரி

Mar 14, 2022

பொதுவாக கொஞ்சம் அழகாக நடனமாடினால் நீ என்ன பெரிய மைக்கேல் ஜாக்சன்-ஆ என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருப்பபோம். அப்படி உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த ஒரு மாபெரும் பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்.

தன் தனித்துவமான நடநத்தால் இவ்வுலகை தன் வசம் வைத்திருந்த மாபெரும் கலைஞன் ஜாக்சன். கடந்த 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் – கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்த பிறந்தார். அந்த குடும்பத்தில் மொத்தம் 9 குழந்தைகள். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த நிலையிலும், இளம் வயதிலேயே இசையி, நடனம் மீது தீராத காதல் கொண்டிருந்தார் மைக்கேல் ஜாக்சன்.

அவரே பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து ‘பாப்’ என்ற புதிய உலகை படைத்து “எனக்கு ராஜாவா நான் வாழுறேன்” என்று வாழ்ந்தார் மைக்கேல் ஜாக்சன். 11வது வயதிலேயே தனது சகோதரர்களுடன் இணைந்து அவர் நடத்திய, ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி, பாப் பிரியர்களை பரவசப்படுத்தியது. இதற்கு கிடைத்த அளவில்லா வரவேற்பை பார்த்து அதை ஆல்பமாகவும் வெளியிட்டார் ஜாக்சன்.

இதை தொடர்ந்து வெளியான ‘ஐ வாண்ட் யூ பேக்’ என்ற இசை ஆல்பமும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று, ஒட்டு மொத்த உலமும் ஜாக்சனை திரும்பி பார்க்க ஆரம்பித்தது. அதன் பிறகு ஜாக்சனின் இசைப்பயணம் வெற்றிக்கரமாக முன்னோக்கி பயணிக்க தொடங்கியது. இசையுலகில் கடந்த 1971 முதல் தனியாக தன் இசைப்பயமத்தை தொடங்கிய ஜாக்சன், தனது நிகழ்ச்சிகளை ஆல்பங்களாகவும் வெளியிட்டு வந்தார். இது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் அவருக்கு பெற்றுத் தந்தது.இவரின் ஆல்பங்கள் விற்பனையில் துவம்சம் செய்தது.

1980களில் பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நிலையில், மேற்கத்திய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் எம்.டி.வி. தனது ஒளிபரப்பை துவக்கியது. அந்த டிவியில் ஜாக்சன் நடத்திய ‘பீட் இட்’, ‘பில்லி ஜூன்’ மற்றும் ‘திரில்லர்’ போன்ற இசை நிகழ்ச்சிகள், அவரது புகழை உலகம் முழுவதும் பரப்பியதோடு, அந்த டிவியையும் குறுகிய காலத்தில் பிரபலப்படுத்தியது. மைக்கேலின் தொடர் வெற்றிகள் காரணமாக, 75 கோடி ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் பெற்று, ஈடு இணையற்ற பாப் பாடகராக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.

எல்லாவற்றிற்க்கும் சருக்கல் என்ற ஒன்று இருக்கும், அதேபோல் 1990களின் கடைசியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திக்க ஆரம்பித்தார் ஜாக்சன். பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் பலமுறை முகத்தை மாற்றியது மற்றும் பண விவகாரம் போன்றவற்றால் பெரும் சர்ச்சைத்துள் சிக்கினார். அது போக குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்பறுத்தியதாகவும் குற்றங்கள் வைக்கப்பட்டது. இந்த வழக்கு விவகாரங்களுக்காக தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். ஆனாலும் 2005ம் ஆண்டு இவ்வழக்கிலிருந்து மீண்டு தன் கொடியை நிலை நாட்ட மீண்டும் உருவெடுத்தார்.

மைக்கேல் ஜாக்சனின் இல்லற வாழ்க்கையும் நீண்ட காலம் இனிமையானதாக நிலைத்திருக்கவில்லை.மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் -2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.பொதுவாகவே குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் ஜாக்சன்.அவரும் குழந்தைகளோடு குழந்தையாய் மாறி குறும்பாக செய்த விஷயங்கள் பல சமூக வலைத்தளத்தில் இன்றும் பேசி வருகிறது.


இத்தகைய பெருமைக்குரிய இசை மன்னன் 2009-ல் இந்த பாப் இசை உலகில் மட்டுமின்றி இந்த மொத்த உலகை விட்டே மறைந்தார். இவரின் மரணம் இன்றும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பாப் மன்னனின் மறைவு பல ரசிகர்களையும், இசை ப்ரியர்களையும் மனமுடைக்க நேரிட்டது. இன்றும் பாப் உலகின் அழியா சான்றாக ஒவ்வொரு மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களின் மனதில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் இந்த அசர வைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *