• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திமுகவில் இணைகிறாரா நயன்தாரா?

காதலர் விக்னேஷ் சிவன் உடன் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகை நயன்தாரா வெள்ளிக்கிழமையான இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது, அங்கே வந்த சென்னையின் புது மேயர் பிரியா ராஜனை இருவரும் சந்தித்த நிலையில், அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நயன்தாரா, சென்னையில் உள்ள பல முக்கிய கோயில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்து வருவதாககூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அதே நேரம் சென்னையின் புது மேயராக தேர்வாகி உள்ள பிரியா ராஜனும் காளிகாம்பாள் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பிரியா ராஜனை சந்தித்து பேசினர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சந்திப்பு எதேச்சையாக நடந்ததா? அல்லது அரசியல் சார்ந்த சந்திப்பா? அல்லது நயன் திமுகவில் இணையப்போகிறாரா என இணையத்தில் நெட்டிசன்கள் தீவிரமாக டிஸ்கஷன் செய்து வருகின்றனர்!