தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி! ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றம் என எந்த ஒரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர்! இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் உள்ள இரண்டு ஃபார்முலாக்கள் குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘சினிமாவில் கலை நோக்கத்துடன் எடுக்கப்படும் சினிமாக்கள் மற்றும் வியாபார நோக்கத்துடன் எடுக்கப்படும் சினிமாக்கள் என இரண்டு ஃபார்முலாக்கள் உள்ளன. அதில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் கலை நோக்கத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்களாக இருக்கும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் வியாபார நோக்கில் எடுக்கப்படும் திரைப்படங்களாக இருக்கும். ஒரு சினிமாவிற்கு கலையும் வேண்டும் வியாபாரமும் வேண்டும் அப்போதுதான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். எனவே கமல் சார் ஃபார்முலா ரஜினிகாந்த் ஃபார்முலா என இரண்டும் கலந்த கலவைதான் ஒரு நல்ல சினிமா’ என்றார்!