• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Mar 7, 2022

குடமிளகாய் ரைஸ்:

தேவையானவை:
சாதம் – ஒரு கப், குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, பூண்டு – 10 பல், இஞ்சி – சிறிய துண்டு, கடுகு – கால் டீஸ்பூன். நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தோலுரித்த பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய குடமிளகாய், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதம் சேர்த்துக் கலக்க… குடமிளகாய் ரைஸ் ரெடி!