• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரவுடிகளுக்கு வலை… டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

Byகாயத்ரி

Mar 4, 2022

ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிக்க வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறையில் அடைக்க வேண்டும். அதன்பின் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள திருட்டு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும்.

அதனை தொடர்ந்து தவறு செய்யும் ரவுடிகளை மாவட்ட வருவாய் அதிகாரி முன் ஆஜர்படுத்தி நல்லொழுக்கப் பத்திரம் பெற வேண்டும். அதை மீறுபவர்களை ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தினசரி கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்கள் குற்றங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின் குற்றவாளிகளின் படங்கள் மற்றும் வீடியோ’க்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.