• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ஒரே நாளில் 9 காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்!…

By

Aug 21, 2021

சுப முகூர்த்த தினமான நேற்று பல்வேறு இடங்களில் திருமணம் நடைபெற்ற நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 9 காதல் ஜோடிகள் தங்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் வெவ்வேறு இடங்களில் இருந்து திருமணம் செய்து விட்டு பெற்றோரிடம் பாதுகாப்பு கேட்டு பவானி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்..

இதையடுத்து மகளிர் போலீசார் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 9 காதல் ஜோடிகளில் ஒருவரின் பெற்றோர் மட்டுமே திருமணத்தை ஏற்று கொண்ட நிலையில் மீதமுள்ள 8 ஜோடிகளில் பெண்களை மணமகன் வீட்டாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். ஓரே நாளில் 9 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.