• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று அறிவிப்பு..

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிப்பு.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மாலை சரியாக 4 மணிக்கு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வை நடத்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முனைப்பு காட்டி வரும் நிலையில், தமிழகத்திலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. பொதுத்தரவை சந்திக்கவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது.