• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இனி இலவச உணவு…

Byகாயத்ரி

Feb 22, 2022

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல, அவரின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தக்கூடிய காணிக்கை தொகையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.கோவிலை நிர்வாகம் செய்யக்கூடிய திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), பிப்.17 அன்று, 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது. அதில் நடப்பு ஆண்டில் மட்டும் 1000 கோடி வருவாய் பக்தர்களின் காணிக்கை மூலம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உண்டியல் காணிக்கை நிதிக்கு வட்டி மூலம் ரூ. 668.51 கோடி ரூபாயும், அதே சமயம் ரூ. 365 கோடி ரூபாய், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மற்றும் மற்ற பிரசாதங்கள் மூலம் வருவாய் ஈட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி வருவாய் இலக்கை நிர்ணயித்த அதேசமயம், இனி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில், திருமலையில் தனியார் உணவகங்கள், சாலை ஓர உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்படாது என்றார். அதேசமயம் உணவகம் நடத்தி வருபவர்கள் அனைவரும் திருமலையில் தங்கள் தொழிலை மாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.