• Mon. Jun 15th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கைகாட்டியில் அதிகரிக்கும் குரங்குகள் தொல்லை..

ஊட்டி அருகேயுள்ள கைகாட்டி பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ள தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஊட்டி கைகாட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பஸ்சிற்காக காத்திருப்பது வழக்கம். டீ கடைகள், காய்கறி கடைகள் போன்றவைகளும் உள்ளன. குந்தா வனச்சரக அலுவலகமும் இப்பகுதியில் தான் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, சமீப காலமாக கைகாட்டியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. கடைகளில் இருக்கும் வாழைப்பழம் உள்ளிட்டவற்றை தூக்கி சென்று விடுகின்றன. பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்களையும் அச்சுறுத்துகின்றன.
இதனால், அப்பகு தியை சேர்ந்த பொது மக்கள் பெரிதும் சிரமம டைந்துள்ளனர். எனவே, கைகாட்டி பகுதியில் தொல்லை செய்யும் குரங் குகளை, பிடித்து வனப்ப குதிகளில் கொண்டு விட எடுக்க நட வடிக்கை வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது.